1. காது வலி குணமாக: மணத்தக்காளி கீரை,துளசி இலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் குணமாகும்.
2. காது இரைச்சல் குணமாக: வசம்பை சுட்டு புகையை காதில் விட்டால் குணமாகும்.
3. காதில் சீழ்வடிதல் குணமாக: முடக்கத்தான் இலை சாறில் சீரகப் பொடி போட்டு ஊறவைத்து சில துளிகள் விட்டால் குணமாகும்.
4. காது அடைப்பு மந்தம் விலக: தூதுவளை உண்பதால் காது அடைப்பு குணமாகும்.
5. காது வலிக்கு: பனை மரத்தின் பட்டையை நெருப்பில் காட்டி சாறு பிழிந்து ஓரிரு சொட்டுகள் காதில் விட்டு வர குணமாகும்.
6. காது அடைப்பு கட்டி குணமாக:
தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டால் குணமாகும்.
7. காது செவிடு சரியாக:
வெள்ளாட்டு பால், நல்லெண்ணெய்,வில்வ காய், பசுமூத்திரம் இவர்களை காய்ச்சி ஆற வைத்து தினசரி சில சொட்டு காதில் விட்டு வர குணமாகும்.
8. காது குத்தல் நிற்க: பெருங்காயத்தை பொரித்து தேங்காய் எண்ணெயில் சிறிது நேரம் ஊறவைத்து அதில் இரு துளிகள் காதில் விட்டால் காது குத்தல் நிற்கும்.
9. காது குடைச்சல் குணமாக: எலுமிச்சை பழச்சாறு இரண்டு மூன்று சொட்டுகள் காதில் விட சரியாகும்.
10. காது மந்தம் தீர: திருநீற்றுப் பச்சிலையை வாட்டி பிழிந்த சாற்றை 2 துளி காதில் விட்டால் காது மந்தம் தீரும்.

No comments:
Post a Comment