1. கண்வலி: எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட கண் வலி சரியாகும்.
2. கண்பார்வை தெளிவு பெற:
பொண்ணாங்கண்ணி கீரை 60 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு பெறும்.
3. கண் சூடு: நெல்லிக்காய் சாறு பிழிந்து ஒவ்வொரு ஸ்பூன் இரு வேளை கொடுக்க குணமாகும்.
4. கண் எரிச்சல்: அரைக்கீரை சாப்பிட்டு வர கண் எரிச்சல் தீரும்.
5.கண் குளிர்ச்சி பெற: தாமரை இதழ்களை காய்ச்சி தேன் கலந்து சாப்பிட்டு வர கண்கள் குளிர்ச்சி பெறும்.
6. கிட்டப்பார்வை தூரப்பார்வை நீங்க:
நல்லெண்ணெய் வெங்காயச்சாறு புளிய இலைச்சாறு கலந்து கண்ணில் கட்டி 10 நிமிடம் கழித்து குளித்து வர குறைகள் நீங்கும்.
7. கண்ணில் நீர் வடிதல் நிற்க: நாவற்பழத்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வர குணமாகும்.
8. கண் சிவப்பு மாற: புளிய இலை கொழுந்தை இரு கண்களின் மேல் வைத்து கட்டி ஒரு மணி நேரம் கழித்து எடுத்தால் குணமாகும்.
9. மாலைக்கண் நோயை தடுக்க: பப்பாளி பழம் சாப்பிட்டு வர குணமாகும்.
10. கண் ஒளி பெற: சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து கொள்ள கண்கள் ஒளி பெறும்.

No comments:
Post a Comment