Monday, May 20, 2019

வாய் சம்பந்தமான அனைத்து நோய்களிலிருந்து விடுபட








1. வாய்ப்புண் குணமாக: தேங்காய் பாலுடன் தேன் கலந்து பருகுவதன் மூலம் வாய்ப்புண் குணமாகும்.



2. உதடு வெடிப்பு குணமாக:
 கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து தடவ குணமாகும்.



3. எச்சில் புண் குணமாக:
வெள்ளைப்பூண்டு சாரையும் வெற்றிலைச் சாரையும் கலந்து புண் பட்ட இடத்தில் தடவி வந்தால் எரிச்சல் புண் குணமாகும்.



4. வாய் துர்நாற்றம் நீங்க:
நான்கு கைப்பிடி வேப்பிலை ஒரு பிடி உப்பை சட்டியில் கருக்கி தூளாக்கி அதில் பல் துலக்கி வர வாய் துர்நாற்றம் நீங்கும்.



5‌. விக்கல் குணமாக: முற்றிய மாவிலையைை பொடியாக்கி தணலில் போட்டு சுவாசித்தால் விக்கல் தீரும்.


பல் சம்பந்தமான அனைத்து நோய்களிலிருந்து விடுபட










1. பல் உறுதி பெற:

✓ மாவிலையை பொடி செய்து பற்களை துலக்கி வந்தால் பல் உறுதி பெறும்.

✓ நெல்லிக்காயை பற்களினால் நன்கு மென்று தின்று வந்தால் பற்கள் உறுதி பெறும்.

✓ மாதுளம் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பற்கள் உறுதி பெறும்.



2‌. பல்வலி குணமாக: 
தொடர்ந்து கோவை பழம் சாப்பிட்டு வந்தால் பல்வலி குணமாகும்.



3. பல் கூச்சம் நீங்க: 
புதினா இலையை காயவைத்து சம அளவு உப்பு சேர்த்து அரைத்து தூளாக்கி காலை மாலை பல்துலக்கி வந்தால் பல் கூச்சம் நீங்கிவிடும்.





4. ஈறு வீக்கம் ரத்த கசிவு குணமாக:
செவ்வாழைப் பழத்தை இரவு சாப்பிட்டு வர குணமாகும்.





5. சொத்தைப்பல் குணமாக:
இஞ்சி சாறுடன் தேன் கலந்து  குடித்து வர சொத்தைப்பல் குணமாகும்.




6. பல் கரை போக: 
பிரமத் தண்டு இலையை சுட்டு சாம்பலாக்கி வந்தால் பல் கறை நீங்கிவிடும்.



Sunday, May 19, 2019

காது சம்பந்தமான அனைத்து நோய்களிலிருந்து விடுபட







1. காது வலி குணமாக: மணத்தக்காளி கீரை,துளசி இலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் குணமாகும்.



2. காது இரைச்சல் குணமாக: வசம்பை சுட்டு புகையை காதில் விட்டால் குணமாகும்.



3. காதில் சீழ்வடிதல் குணமாக:  முடக்கத்தான் இலை சாறில் சீரகப் பொடி போட்டு ஊறவைத்து சில துளிகள் விட்டால் குணமாகும்.



4. காது அடைப்பு மந்தம் விலக: தூதுவளை உண்பதால் காது அடைப்பு குணமாகும்.




5. காது வலிக்கு:  பனை மரத்தின் பட்டையை நெருப்பில் காட்டி சாறு பிழிந்து ஓரிரு சொட்டுகள் காதில் விட்டு வர குணமாகும்.



6. காது அடைப்பு கட்டி குணமாக:
தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டால் குணமாகும்.



7. காது செவிடு சரியாக:
வெள்ளாட்டு பால், நல்லெண்ணெய்,வில்வ காய், பசுமூத்திரம் இவர்களை காய்ச்சி ஆற வைத்து தினசரி சில சொட்டு காதில் விட்டு வர குணமாகும்.



8. காது குத்தல் நிற்க: பெருங்காயத்தை பொரித்து தேங்காய் எண்ணெயில் சிறிது நேரம் ஊறவைத்து அதில் இரு துளிகள் காதில் விட்டால் காது குத்தல் நிற்கும்.




9. காது குடைச்சல் குணமாக: எலுமிச்சை பழச்சாறு இரண்டு மூன்று சொட்டுகள் காதில் விட சரியாகும்.



10. காது மந்தம் தீர: திருநீற்றுப் பச்சிலையை வாட்டி பிழிந்த சாற்றை 2 துளி காதில் விட்டால் காது மந்தம் தீரும்.

Saturday, May 18, 2019

கண் சம்பந்தமான அனைத்து நோய்களிலிருந்து விடுபட









1. கண்வலி: எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட கண் வலி சரியாகும்.

2. கண்பார்வை தெளிவு பெற:
பொண்ணாங்கண்ணி கீரை 60 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு பெறும்.

3. கண் சூடு: நெல்லிக்காய் சாறு பிழிந்து ஒவ்வொரு ஸ்பூன் இரு வேளை கொடுக்க குணமாகும்.

4. கண் எரிச்சல்: அரைக்கீரை சாப்பிட்டு வர கண் எரிச்சல் தீரும்.


5.கண் குளிர்ச்சி பெற: தாமரை இதழ்களை காய்ச்சி தேன் கலந்து சாப்பிட்டு வர கண்கள் குளிர்ச்சி பெறும்.

6. கிட்டப்பார்வை தூரப்பார்வை நீங்க:
நல்லெண்ணெய் வெங்காயச்சாறு புளிய இலைச்சாறு கலந்து கண்ணில் கட்டி 10 நிமிடம் கழித்து குளித்து வர குறைகள் நீங்கும்.

7. கண்ணில் நீர் வடிதல் நிற்க: நாவற்பழத்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வர குணமாகும்.

8. கண் சிவப்பு மாற: புளிய இலை கொழுந்தை இரு கண்களின் மேல் வைத்து கட்டி ஒரு மணி நேரம் கழித்து எடுத்தால் குணமாகும்.

9. மாலைக்கண் நோயை தடுக்க: பப்பாளி பழம் சாப்பிட்டு வர குணமாகும்.

10. கண் ஒளி பெற: சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து கொள்ள கண்கள் ஒளி பெறும்.





சர்க்கரை நோய் குணமாக






1.  கோவைப்பழம் தினசரி 1 சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.








2. தினசரி 5 ஆவாரம்பூவை மென்று சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குணமாகும்.






3. பாகற்காய், அவரைப்பிஞ்சு இவைகளை அடிக்கடி உணவுகளில் சேர்த்து கொண்டால் சர்க்கரை நோய் குணமாகும்.







4. கொன்றை மர பூவை மைய அரைத்து மோரில் கலந்து பருகி வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.










5. உளுந்தால் செய்த உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.






































































































































.







வாய் சம்பந்தமான அனைத்து நோய்களிலிருந்து விடுபட

1. வாய்ப்புண் குணமாக : தேங்காய் பாலுடன் தேன் கலந்து பருகுவதன் மூலம் வாய்ப்புண் குணமாகும். 2. உதடு வெடிப்பு குணமாக:  கரும்பு த...