1. வாய்ப்புண் குணமாக: தேங்காய் பாலுடன் தேன் கலந்து பருகுவதன் மூலம் வாய்ப்புண் குணமாகும்.
2. உதடு வெடிப்பு குணமாக:
கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து தடவ குணமாகும்.
3. எச்சில் புண் குணமாக:
வெள்ளைப்பூண்டு சாரையும் வெற்றிலைச் சாரையும் கலந்து புண் பட்ட இடத்தில் தடவி வந்தால் எரிச்சல் புண் குணமாகும்.
4. வாய் துர்நாற்றம் நீங்க:
நான்கு கைப்பிடி வேப்பிலை ஒரு பிடி உப்பை சட்டியில் கருக்கி தூளாக்கி அதில் பல் துலக்கி வர வாய் துர்நாற்றம் நீங்கும்.
5. விக்கல் குணமாக: முற்றிய மாவிலையைை பொடியாக்கி தணலில் போட்டு சுவாசித்தால் விக்கல் தீரும்.

No comments:
Post a Comment