1. பல் உறுதி பெற:
✓ மாவிலையை பொடி செய்து பற்களை துலக்கி வந்தால் பல் உறுதி பெறும்.
✓ நெல்லிக்காயை பற்களினால் நன்கு மென்று தின்று வந்தால் பற்கள் உறுதி பெறும்.
✓ மாதுளம் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பற்கள் உறுதி பெறும்.
2. பல்வலி குணமாக:
தொடர்ந்து கோவை பழம் சாப்பிட்டு வந்தால் பல்வலி குணமாகும்.
3. பல் கூச்சம் நீங்க:
புதினா இலையை காயவைத்து சம அளவு உப்பு சேர்த்து அரைத்து தூளாக்கி காலை மாலை பல்துலக்கி வந்தால் பல் கூச்சம் நீங்கிவிடும்.
4. ஈறு வீக்கம் ரத்த கசிவு குணமாக:
செவ்வாழைப் பழத்தை இரவு சாப்பிட்டு வர குணமாகும்.
5. சொத்தைப்பல் குணமாக:
இஞ்சி சாறுடன் தேன் கலந்து குடித்து வர சொத்தைப்பல் குணமாகும்.
6. பல் கரை போக:
பிரமத் தண்டு இலையை சுட்டு சாம்பலாக்கி வந்தால் பல் கறை நீங்கிவிடும்.

No comments:
Post a Comment